அப்படி இப்படினு ஒரு வழியா அடுத்த பதிவு.....அதுவும் பெங்களூருவில் இருந்து....
நமக்குத்தான் சாப்பாட்டத்தவிர வேற எதுவும் தெரியதே.....
இந்த 2 மாசத்துல சாப்பிட்ட வித்தியாசமான ஐட்டங்களை எழுதுவோம்னு ஒரு ஆசை
உக்கர்ணி......
கெட்ட வார்த்தை இல்லேங்க.....
நம்ம அரிசி பொரி இருக்குல்ல......அத நல்லா தண்ணில ஊற வெச்சு....நல்லா காரமா.....வெங்காயம், தக்காளி, பூண்டு, மஞ்சள் பொடி இதெல்லாம் போட்டு தாளிச்சு......ஒரு தட்டுல சூடா எடுத்து........நம்ம பச்ச மொளகா இருக்கு பாருங்க......அதுல ஒரு பஜ்ஜி.....அதுவும் எப்படி......குழம்புக்கு போடற மொளகா.....நல்ல காரமா.....
இது ரெண்டையும்.....லேசா மழைத்தூறல் விழர நேரத்துல சாப்பிட்டு பாருங்க........
பெண்ணே தோசே
ஒன்னும் கெடயாது.....நம்ம ஊத்தப்பம்.....அத அப்படியே வெண்ணெயில பொரிச்சு எடுத்து காரமா தேங்கா சட்னி, கொஞ்சம் அவிச்ச உருளை....அப்படியே சேர்த்து அடிக்க வேண்டியதுதான்
ஸ்பெஷல் பஜ்ஜி
நம்ம ஊரு மொளகா பஜ்ஜிதான்.....ஆனா.....அந்த பஜ்ஜிய நடுவுல கீறி, வெங்காயம், பச்ச மொளகா, மிளகாய்த்தூள், கரம் மசாலா இதெல்லாம்......தூவி......கொஞ்சம் எலுமிச்சைய பிழிஞ்சு.....நடுரோட்டுல.....நியூஸ்பேப்பர்ல.....சூடு தாங்காம.....அவதி அவதியா திங்கற சொகம் இருக்கு பாருங்க...... அது பஜ்ஜி.....
ஆனாலும் ஒர் கொறை பாருங்க இங்கே......புரொட்டாவும் சால்னாவும் கெடைக்கல....... கை எல்லாம் சாயங்காலம் 7 மணியானா உதறுது.....
ஆனா....காசுக்கேத்த தோசை இங்கே கெடைக்குதுங்க.....நல்லா தரமாவே கெடைக்குது.....
ஆனாலும் அந்த புரோட்டா சால்னா கெடைக்க மாட்டேங்குது......
யாருக்காவது எடம் தெரியும்ணா சொல்லுங்க......ஒரு மதுரைக்காரனுக்கு வழி சொன்ன புண்ணியம் கெடைக்கும்......