Thursday, November 16, 2006

மதுரை - உணவுக்கான ஊர்

மதுரைக்காரர்கள் - தின்னப்பிறந்தவர்கள்

என்னாடா நம்மள எல்லா ஹோட்டல்லயும் அடையாளம் கண்டுக்கராங்களே.........பைவ் ஸ்டார் ஹோட்டல்ல இருந்து பிளாட்பாரக்கடை வரைக்கும் சிறப்பு கவனிப்பு கெடைக்குதே, நாமளும் VIP ஆயிட்டோமோனு திடீர்னு ஒரு நெனப்பு, அப்புறம்தேன் உண்மை உரைச்சது. அடே பக்கி, நோக்கமத்து தின்னுட்டு திரியறயே, அலைஞ்சு திரிஞ்சு பாடுபட்டு (பல நாள் டயரியா) கண்டுபுடிச்ச இந்த பொக்கிஷத்த சபைல ஒரு லிஸ்ட் எடுக்கலாம்னு முயற்சியாவது பண்ண வேண்டியதுதானேனு மனசாட்சி ஒரே நமைச்சல். சரி, இந்த வயசான பெரிய வாத்தியார் வேற (தருமி) ஜோதில கலக்க சொல்லிட்டு இருக்காரே, அதான் களத்துல குதிச்சுர வேண்டியதுதான்னு எறங்கிட்டேன்(நீங்கள்ளாம் பாவம்).

மதுரைல அசைவம் சாப்பிடுரதே ஒரு கலைங்க. என்னதான் சொல்லுங்க, பொன்னுசாமிலயும், வேலு மிலிட்டரிலயும், ஷெரட்டன்களிலும் கிடைக்காத ஒரு தனி சுவை அன்பகத்துலயும் அம்மா மெஸ்லயும் இருக்குங்க. அதே நேரம் ஒவ்வொரு நாக்குக்கும் ஒரு சுவை இருக்கு. அதனால இந்த லிஸ்ட்ல சில பேருக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம், இருந்தால் அதையும் சொல்லிருங்க. இந்த லிஸ்ட் யாருக்காவது ஒரு கையேடு போல கூட பயன்படலாம். அதனால கடை முகவரிகளை தெரியலைன்னா மதுரைக்கு வந்து போன் போடுங்க.......நானே கூட்டிட்டு போறேன் (பில்லுக்கு பணம் மட்டும் நீங்க குடுத்துருங்க).

இட்லி
முருகன் இட்லி கடை
குமார் மெஸ், தல்லாகுளம்.
கோனார் கடை
முதலியார் கடை, கோரிப்பாளையம்
அம்மா கடை, ஸ்காட் ரோடு
ஐயப்பா மெஸ், பெருமாள் கோவில் அருகே.

தோசை
மேற் சொன்ன அனைத்தும்

நெய் ரோஸ்ட்
ராஜெந்திரா காபி, டவுன் ஹால் ரோடு

முட்டை தோசை
குமார் மெஸ், தல்லாகுளம். (முட்டையை மாவில் கலந்து)
கோனார் கடை
அம்மா கடை, ஸ்காட் ரோடு
ஐயப்பா மெஸ், பெருமாள் கோவில் அருகே.

புரோட்டா (மதுரையின் தேசிய உணவு)
பை பாஸ் பாண்டியன்
அன்னம், மேல பெருமாள் மேஸ்திரி வீதி
சுல்த்தான், சிம்மக்கல்
அன்பகம், நெல்பேட்டை
அன்பகம், வடக்கு வெளி வீதி
ஆறுமுகம் கடை, தல்லாகுளம்.
மற்றும் பல வீட்டுக்கு பக்கத்துல இருக்கர கடைகள்.

சால்னா
பை பாஸ் பாண்டியன்
அன்னம், மேல பெருமாள் மேஸ்திரி வீதி
சுல்த்தான், சிம்மக்கல்
சரஸ்வதி மெஸ்

முட்டை புரோட்டா
அன்பகம், நெல்பேட்டை
சரஸ்வதி மெஸ்
பை பாஸ் பாண்டியன்
அன்னம், மேல பெருமாள் மேஸ்திரி வீதி
பெல் ஹோட்டல்

மட்டன் சுக்கா
அருளானந்தர் மெஸ்
ஜெயவிலாஸ் மெஸ்
அனைத்து அன்பகங்கள்
பெல் ஹோட்டல்
குமார் மெஸ்
அம்மா மெஸ்
சந்திரன் மெஸ்
கோனார் கடை
சரஸ்சதி மெஸ்

கோழி குழம்பு
சரஸ்வதி மெஸ்
பெல் ஹோட்டல்
சந்திரன் மெஸ்
குமார் மெஸ்

மட்டன் பிரியாணி
அம்சவல்லி
சுல்த்தான்
பெல் ஹோட்டல்
சந்திரன் மெஸ்
தாஜ், டவுன் ஹால் ரோடு

கோழி பிரியாணி
அம்சவல்லி
பெல் ஹோட்டல்
அம்மா மெஸ்
சந்திரன் மெஸ்
தாஜ், டவுன் ஹால் ரோடு

சிக்கன் 65
பை பாஸ் பாண்டியன்
சரஸ்வதி மெஸ்
பெல் ஹோட்டல்
குமார் மெஸ்

சில்லி சிக்கன்
குமார் மெஸ்
பெல் ஹோட்டல்
அம்சவல்லி

அயிரை மீன் கொழம்பு
சாரதா மெஸ்

சிக்கன் சுக்கா
கோனார் கடை

சிக்கன் லாலிபாப்
பெல் ஹோட்டல்

கிரில்டு சிக்கன்
பெல் ஹோட்டல்
JB, பை பாஸ்

தந்தூரி சிக்கன்
பஞ்சாபி தாபா
பெல் ஹோட்டல்
விங்ஸ் கிட்சன்

மட்டன் கறி தோசை
கோனார் கடை

முட்டை போண்டா
மாப்பிள்ளை விநாயகர் திரையரங்கம்
____________________________________________________________________________ பாகம் இரண்டு அடுத்த வாரம் தொடரும்.

4 comments:

தருமி said...

இப்படி சுத்தி சுத்தி ஊர் "மேஞ்சா" தொப்பை ஏன் இப்படி இருக்காது? சரி..வயசுப் பையன்..நல்லா சாப்பிடுங்க..

Anonymous said...

வணக்கம்.

malaysiangroup said...

மதுரைக்காரர்கள் தின்னப் பிறந்திருக்கிறார்கள்ன்னு உண்மை ஒரு பக்கம் இருக்க,நீங்க எல்லா ஹோட்டலயும் சாப்பிட்டு பார்த்து,அனுபவிச்சு லிஸ்டு கொடுத்திருக்கீங்க பாத்தீங்களா,அதுவும் மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர் முட்டை போண்டா,கோனார் மெஸ்....அதுக்கு ஒரு சபாஷ்...

Several tips said...

நல்லா எழுதியிருக்கிறீர்கள்